எரிவாயு கசிவு ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசம்!!

-MMH

சிங்கம்புணரி அருகே முத்துசாமிபட்டியில் எரிவாயு (LPG) கசிவினால் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசம்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே முத்துச்சாமிபட்டியில் உள்ள ஒருவர் சொந்தப் பயன்பாட்டிற்காக எரிவாயு இணைப்புடன் கூடிய மாருதி ஆம்னி வாகனத்தை வைத்துள்ளார்.

நேற்றிரவு வாகனத்தை நிறுத்திய பின்பு எரிவாயு கசிவு இருந்துள்ளது. வாயுக் கசிவை கவனிக்காமல் இன்று காலை உரிமையாளர் வாகனத்தை இயக்கி உள்ளார் கசிந்து பரவியிருந்த, 

எரிவாயுவினால் ஆம்னி வேன் திடீரென தீப்பற்றியது. உடனே சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறை மற்றும் முண்ணனி தீயணைப்பாளர் சீ.பிரகாஷ் தலைமையிலான குழுவினர்களுடன் விரைந்து சென்றனர்.

ஊர் பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முற்றிலும் எரிந்த ஆம்னி வேன், எலும்புக்கூடாக காட்சியளித்தது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments