முன்னாள் அதிமுக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!!
திருச்சியில் அதிமுக முன்னாள் நிர்வாகி வீட்டில் நடைபெற்று வரும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில், கணக்கில்வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி காஜாமலை சமதுஸ்கூல் தெருவை சேர்ந்தவர் சிராஜுதீன்(65). இவர், அதிமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு முன்னாள் செயலாளராகவும், அரசுக்கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், கடந்த 2001-06 கால கட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு நெருக்கமானவராக இருந்தாக கூறப்படுகிறது.
இதனிடையே, சீராஜூதீன் வெளிநாடுகளில் இருந்து செல்போன்களை இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன்கள் இறக்குமதி செய்ததில் மோசடி செய்ததாக, சிபிஐ போலீசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் டெல்லியிலிருந்து வந்த சிபிஐ அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழு, சிராஜுதீன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பாரூக், சிவகங்கை.
Comments