பகலிலும் யானை கூட்டத்தின் அட்டகாசம்!! - பீதியில் மக்கள்!!

     -MMH

     கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலையில் காட்டில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் உள்ள மருந்து கடையை உடைத்து நாசம் செய்தது. மேலும் வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து யானைகளை விரட்டினர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில்," ஒவ்வொரு நாளும் பயத்துடனும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. அடிக்கடி இது போன்ற பிரச்சினைகள் நிலவி வருகிறது. இரவில் தான் பயம் என்றாலும் இப்பொழுது பகலிலும் வருகிறது. வனத்துறை அதிகாரிகளும் அரசும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்." என்றார். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments