கூட்டுறவு வங்கியின் ஏ வகுப்பு அங்கத்தினரின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம்!!

     -MMH

     தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட  மீனாட்சிபுரம் மூலத்துறை கூட்டுறவு வங்கியின் ஏ வகுப்பு அங்கத்தினரின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் 2020 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மீனாட்சிபுரம் மூலத்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வைத்து வங்கியின் தலைவர் திரு சுப்பையனன் அவர்களின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் ஏ வகுப்பு அங்கத்தினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நிகழ்ச்சி குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறை வணக்கம், வரவேற்புரை, மறைந்த முன்னாள் அங்கத்தினர்களுக்கு நினைவஞ்சலி, கடந்த வருட பொதுக்குழு மினிட்ஸ் புக் படித்து அங்கீகரித்தல், 2019 2020 ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், 2019 2020 வருட வரவு செலவு கணக்கு அங்கீகரித்தல், 2021 2022 வருடத்திற்கான பட்ஜெட் அங்கீகரித்தல், 2019 2020 வருட தனி அறிக்கை மற்றும் குறைகள் சரிசெய்தல் அங்கீகரித்தல், 2019 2020 வருட லாப கணக்கு, உபயோகமற்ற பொருட்கள் நீக்கம் செய்வது குறித்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும், தலைவர் அனுமதியுடன் பிற விஷயங்கள், இறுதியாக நன்றியுரை பின்குறிப்பு அங்கத்தினர்களின் கேள்விகளும் கருத்துக்களும் 25 12 2020 அன்று மாலை 5 மணிக்கு முன் வங்கி செயலாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அங்கத்தினர்கள் தவறாமல் வங்கியின் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-M.சுரேஷ் குமார், கோவை தெற்கு. 

Comments