மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனருக்கு பசுமையின் இளைஞர் விருது!!

-MMH

     செல்லியம்பட்டி மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனருக்கு காரியாபட்டி வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக பசுமையின் இளைஞர் விருது வழங்கி கொளரவிப்பு. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா செல்லியம்பட்டி மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனருக்கு காரியாபட்டி பேரூராட்சி திருமணமண்டபத்தில்  விருதுநகர்மாவட்ட போட்டோஸ்டூடியோ மற்றும் வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில்,

கல்விச்சேவையோடு 1500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனர் முகமது ஆஸிம் சொந்த வருமானத்தில் இதுவரை மரங்கள் நடவு செய்ததற்க்கும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து நட்டும், பராமரித்தும் வருவதைப் பாராட்டி, மாநிலத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள்  பசுமையின்இளைஞர்விருது " வழங்கிக் கௌரவித்தனர்.இந்த விருதை அவருடன் சேர்ந்து   களப்பணியாற்றும் அனைவருக்குமான விருது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். என்று மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனர் முகம்மது ஆஸிம், தமிழாசிரியர் கூறினார்.

-அப்துல்சலாம் திருப்பத்தூர். 




Comments