ஜனவரி மாதத்தில் துவங்கும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்..!!

     -MMH

    பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிக அளவில் கால்நடை வளர்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா  ஊரடங்கு காரணமாக கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.

எனவே கால்நடை வளர்ப்போர் கோமாரி தடுப்பூசியை எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதன்படி வரும் ஜனவரியில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்டம் கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் திரு.பெருமாள் சாமி தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு. 

Comments