அள்ளப்படாத சாக்கடை கழிவு! - அலட்சியம் காட்டும் மாநகராட்சி...!!

     -MMH

    கோயம்புத்தூர் மாவட்டம்  போத்தனூர் குறிச்சி பகுதியில் காந்திஜி ரோடு அருகில் சாக்கடை கழிவுகளை அள்ளி அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ரோட்டு ஓரத்தில் கொட்டி விட்டு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை என்று அந்தப் பகுதியில் வாழும் மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

சாக்கடைகளை கழிவுகளை அள்ளி ரோட்டோரத்தில் போட்டு விட்டு பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் காய்ந்துவிட்டால் அள்ளி விடுவோம் என்று கட்டுக்கதை கூறுவதாக சொல்லி வருகிறார்களாம். அங்கு வசிக்கும் வியாபாரிகளும் மக்களும் இந்த கழிவை அள்ளாவிட்டால் எங்களுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்று மனவேதனையுடன் கூறுகின்றனர்.

-ஈஷா,கோவை.

Comments