தெருவோர நாய்களால் தினந்தோறும் தொல்லை!! - கண்டுகொள்ளுமா மாநகராட்சி...!!

 

    -MMH

    கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் அதிகப்படியான நாய்களால் தொந்தரவு என்று அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.

கோவை மாவட்டம் பகுதியில் உள்ள 100 வார்டு குப்பை கொட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் வெள்ளலூர் பகுதியாகும் இந்த பகுதியில் தினந்தோறும் 100 டன் குப்பை  வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அந்த குப்பையை உண்ணும் வகையில் அதிகமான நாய்கள் அங்கு வளர்கின்றன. இந்த நூற்றுக்கணக்கான நாய்கள் தினந்தோறும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பல இன்னல்களை விளைவிக்கின்றன இதனால் பகலிலும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் வாழ்கின்றனர்.

சாலை ஓரங்களில் நாய்கள் தினந்தோறும் வருவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது இந்த தெரு நாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்தப் பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments