பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்..!! பள்ளிகள் கடைகள் அகற்றப்பட்டது..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ள இடத்தில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு தேவை படும் இடங்களை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் JCP இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர்.

இதில் மருத்துவ மனையின் முன்புறம் உள்ள முகப்பு வாயில் மற்றும் ஒரு சில சிகிச்சை அறைகள் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இதைப்போல அருகில் கடைவீதி  காய்கறி மார்க்கெட் உள்ளது அங்கும் கடைகள் இரவில் JCP இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அபுறப்படுத்தப்பட்டது.வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில்.

இதில் ஒரு பகுதியாக வெங்கட்ராமன் வீதியில் உள்ள கடைகள் இரவில் அகற்றப்பட்டது. அருகில் உள்ள பொள்ளாச்சி வெங்கட்ராமன் ஐயர் வழி நடுநிலைப்பள்ளியும் 20 சதவீதம் முகப்பு சுவர் இடிக்கப்பட் டது.தொடர்ந்து பணிகள் இரவும் பகளும் நடைபெற்று வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments