உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குள் சரி செய்யப்படுமா சாலை..??

 

     -MMH

    கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு, அருள்முருகன் நகர் அருகில் பிரதான சாலையில் இருக்கின்ற குழி, விபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

செட்டிபாளையம் ரோடு, .ஈஸ்வர் நகர், அன்பு நகர்,அருள் முருகன் நகர்,ஜிடி டேங்க் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் இந்நிலையில் அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அருள்முருகன் நகர் பகுதியில் ஏற்பட்ட குழியினால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று விபத்துகள் நடைபெறுவதாகவும், உயிர்சேதம் ஏற்படுவதற்குமுன் மாநகராட்சி நிர்வாகம் அந்த குழியை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும்  கேட்டுக் கொள்கிறார்கள்.

-ஈஷா,கோவை.

Comments