பொன்னமராவதியில் ஆட்சிமொழி செயலாக்கப்பயிற்சி!!

     -MMH

பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி செயலாக்கப்பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி செயலாக்கப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 

வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகளின் அலுவலர் வேலு தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.  முத்தமிழ்ப்பாசறை தலைவர் நெ.இரா.சந்திரன் சிறப்புரையாற்றினார்.  

மேலும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன் ஆட்சிமொழி சட்டம் குறித்தும் அலுவலக கோப்புகள் - ஆணைகளில் தமிழ் மட்டுமே இடம் பெற வேண்டும், பதிவேடுகளில் தமிழில்தான் கையொப்பம் இடவேண்டும் என்பன உட்பட பயிற்சியினை வழங்கினார்.

இதில் ஊராட்சிஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிச் செயலாளர்கள் உட்பட பலர் சமூக இடைவெளியை பின்பற்றி  பங்கேற்றனர்.

- நாளைய வரலாறு செய்திகளுக்காக,

M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments