நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளில், அவருடன் பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினர் சந்திப்பு..!!
திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளில், அவருடன் பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினர் சந்திப்பு.முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான 96 வயதான நல்லகண்ணு அவர்களை,
பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் செ.கர்ணன், ச.மீ.இராசகுமார் மற்றும் உறுப்பினர்கள் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பறம்புமலை பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஆர்.நல்லகண்ணு அவர்களும் பறம்புமலை சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு அரசை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.
-பாரூக், சிவகங்கை.
Comments