தமிழகம் மீட்போம் இணையவழி கருத்தரங்கக் கூட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்றது!!
தமிழகம் மீட்போம் இணையவழி கருத்தரங்கக் கூட்டம் சிங்கம்புணரி யாதவா மஹாலில் நடைபெற்றது: திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் யாதவா மஹாலில் திமுக காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கி திமுக முழுவீச்சுடன் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் 108 இடங்களில் காணொலி காட்சி வாயிலாக கருந்தரங்க கூட்டம் நடைபெற்றது.
இந்த கருந்தரங்கக் கூட்டத்தில் ஒரு பகுதியாக சிங்கம்புணரியில் யாதாவா மஹாலில் நடைபெற்ற காணொலி காட்சியில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். முதலில் மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன் முதலில் காணொலி காட்சியில் உரையாற்றினார்.
அதன்பிறகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். அதன்பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை திமுக கூட்டணி வென்றெடுக்க அனைவரும் உறுதி ஏற்றனர்.
-அப்துல் சலாம், திருப்பத்தூர்.
Comments