பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஊட்ட சத்து பானம்!!

  -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாகாலிங்கபுரம் பகுதில் பொது மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து பானம் வழங்கபட்டது .

பொள்ளாச்சி PA கல்வி குழுமம் பொள்ளாச்சி லயன் கிளப் ஆஃப் கோல்டு (POLLACHI LION CLUB OF GOLD) இணைந்து பொது மக்களுக்கு  ஊட்டச்சத்து பானம் வழங்கினர்.

PA கல்வி குழுமம் நிறுவனர் திரு அப்புக்குட்டி அவர்கள் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து கல்வி நிறுவனர் திரு.அப்புக்குட்டி அவர்கள்  கூறுகையில்:

கொரோனோ முதலான பல்வேறு நோய்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் ஏற்படுகிறது.எனவே சாமானியனின் கைகளுக்கு சென்றடையும் வண்ணம் ஊட்டச்சத்து பானம் வழங்கபட்டு வருவதாக கூறினார்.பொது மக்கள் இந்த செயலுக்கு தங்கள் நன்றியை  பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments