புதிய வைரஸ் அறிகுறிகள்..!!

-MMH 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்திருந்தனர். 

இந்த நிலையில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.

கடந்த புதன்கிழமை தகவலின்படி, இங்கிலாந்தில் 39,237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏற்கனவே இருக்கும் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

இந்நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments