இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அரசுப் பள்ளிக்கூட வளாகம்!

-MMH

இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அரசுப் பள்ளிக்கூட வளாகம்! சுற்றுச்சுவர் கட்டித் தரக் கோரி வலுக்கும் குரல்கள்!

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் 1967-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து பரிதாபமாக உள்ளது. மற்ற மூன்று புறங்களிலும் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளது. 

இதனால் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. இரவு நேரங்களில் 'குடிமகன்கள்' பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். காலை வேளையில் நடைபயிற்சிக்கு வருபவர்களும், வகுப்புகளுக்கு வரும் மாணவர்களும் குடிகாரர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை காண நேர்கிறது.

பள்ளியின் மைதானம் பகல் நேரத்தில் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது. எனவே பள்ளி வளாகத்தின் மாண்பைக் காக்க, உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments