மின் விசிறிக்கு தடை..!! சிறுவன் மனிதாபிமான சாதனை.!

-MMH

பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கோட்டூர், மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்த  மூன்று வயதே ஆன பூவின் ரத்தினம் என்ற சின்னஞ்சிறுவன் நோய்தொற்று காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்தவனுக்கு பொழுதுபோக்குக்காக குருவிகளுக்கு அரிசி போடுவதை அனுதினமும் வழக்கமாகக் கொண்டிருந்தான். இது காலப்போக்கில் குருவிகள் மீது அன்பும் பாசமும் அதிகம் கொண்டான். இந்நிலையில் வீட்டின் மேல் மாடியில் இருந்த மின்விசிறியில் சிட்டுக்குருவி கூடு வைத்திருந்தது இதைக் கண்ட சிறுவன் மின்விசிறியை பயன்படுத்தினால் குருவியின் கூடு கலைந்துவிடும்,          

என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் மின்விசிறியை பயன்படுத்த வேண்டாம் அதில் குருவிக்கூடு உள்ளது தயவு செய்து எனக்காக யாரும் மின்விசிறி பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டான் சின்னஞ் சிறுவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட குடும்பத்தார் மின்விசிறியை பயன்படுத்தவில்லை தற்போது மின்விசிறியில் கூடு வைத்திருந்த குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகிறது இதை அறிந்த சொந்த பந்தங்களும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் சிறுவனை பாராட்டி, வாழ்த்தி  வருகின்றனர். 

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments