நாளை பாரத் பந்த்! - பெரும்பாலான கட்சிகள் ஆதரவு.. இந்தியா முடங்கும் அபாயம் !!

 

    -MMH

     மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி 12 ஆவது நாளாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே சொந்த ஊருக்கு திரும்புவோம் என பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர், விவசாய பிரதிநிதிகளுடன் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக கூட்டத்தின் போது, ​வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டக்களத்தில் இருந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு விவசாய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ஆனால் நடைபெற்ற பேச்சுவாரத்தையில் முடிவு எட்டாப்படாததால், அதன் பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த விவசாய பிரதிநிதிகள், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்துள்ளதால், திட்டமிட்டபடி வரும் 8 ஆம் தேதி "பாரத் பந்த்" நடைபெறும் என அறிவித்தனர். மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.

இதனிடையே, பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெவித்துள்ளன. விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே, விவசாயிகளுடன் 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் 9ஆம் தேதி நடத்தவும், அதற்குள் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-பாலாஜி தங்மாரியப்பன்,

சென்னை போரூர்.

Comments