விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

  -MMH

சிவகங்கை: டிச - 5: விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கையில் திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்! சிங்கம்புணரி திமுகவினர் பங்கேற்பு!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் நடைபெறும் விவசாய சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மக்கள்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு இன்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ,சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.பெரியகருப்பன் எம்எல்ஏ. தலைமையில், முன்னாள் அமைச்சர். இலக்கியத் தென்றல் தென்னவன் முன்னிலையில் சிவகங்கையில் கருப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட மகளிரணி பவானி கணேசன், திருப்பத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.சண்முகவடிவேல், மாவட்ட கவுன்சிலர் ATNR.ரவி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதி. ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி, இளைஞரணி சன்.சீமான், சுப்பையா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிவகங்கை நகரச் செயலாளர் துரைஆனந்த் மற்றும் அயூப்கான் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

சிங்கம்புணரியிலிருந்து திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் பூமிநாதன், செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் அ.கணேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ந.அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், நகர பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், குடோன் சுப்பிரமணி, குமரிபட்டி கணபதி, தலை வணங்காம்பட்டி இராசேந்திரன், கண்ணமங்கலப்பட்டி பெருமாள் மற்றும் ஏராளமானோர் விவசாயிகளுக்கு ஆதரவான திமுகவின் கருப்புச்சட்டை போராட்டத்தில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

- பாரூக், சிவகங்கை.

Comments