சகதீயினால் ஏற்படும் விபத்து சரி செய்யுமா மாநகராட்சி...!!

 

-MMH

கோவை மாவட்டம், போத்தனூர் சாரதா மில் ரோடு மாரியப்ப கோனார் வீதி பகுதியில். கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் அந்தப் பகுதி சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தாள் சேற்றில் சிக்கி கீழே விழும் நிலையும் உள்ளது.

முக்கிய பகுதியான அந்த சாலை வழியாக தினந்தோறும் பெண்களும் முதியவர்களும் அரசு அதிகாரிகளும் பயணிக்கும்  இந்த சாலையை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள். கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்று தற்காலிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து சகதியையும் அகற்றி தர வேண்டும் என்றும் இருசக்கரவாகனத்தில் வருபவர்கள் கீழே விழுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றுஅந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா கோவை.

Comments