தமிழக அரசுப்பேருந்தில் இலவசப்பயணம்!! முதல்வர் அறிவிப்பு...!

-MMH 

தமிழகத்தில் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1800 - க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்களின் உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்த தமிழக முதல்வர், உடனடியாக அதனை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.    

Comments