வீணாய்ப் போகும் இரும்புகள்!! - கண்டுகொள்ளாத ரயில்வே!!

      -MMH

இந்தியத் திருநாட்டில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது ஏனென்றால் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருப்பதால் மக்களுடைய நலனில் இந்தியன் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.


அதிகப்படியான பயணங்கள் ரயில்வே துறையில் இருப்பதால் மக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர் இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கக்கூடிய இரும்பு உலோகம் ரயில் தயாரிக்கும் வகையில் அதிகப்படியாக பயன்பாட்டில் இருப்பதால், ரயில்வே அந்த இரும்புகளை கொள்முதல் செய்து. ரயில் பெட்டி.இன்ஜின் போன்ற சாதனங்களை தயாரித்து வருகின்ற நிலையில். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பயன்படாமல் இருக்கும் பல கோடி மேல் இரும்பு துண்டுகளும் ஆங்காங்கே வீணாகும் நிலையில் காணப்படுகிறது.


இது போன்ற இரும்பு துண்டுகள் பூமிக்குள் புகுந்த வாறு  அழிந்து வரும் நிலையும் காணப்படுவதால் இதை கருத்தில் கொண்டு ரயில்வே துறை அந்த வீணாக மண் சுவைக்கும் இரும்பு துண்டுகளை மறுஉற்பத்தி செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

-ஈசா,கோவை.

Comments