புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை!!

    -MMH

    புயல், வெள்ளம், மழை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய மத்திய குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை

சென்னை: புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழு ஆலோசனை தொடங்கியது. மழை, வெள்ள, புயல் பாதிப்பு குறித்து 2 நாட்களாக மத்தியகுழு ஆய்வு நடத்திய நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழு, கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது.

சென்னையில் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வுகளைத் தொடங்கியது.

இதையடுத்து மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களை நேற்றும், நேற்று முன்தினமும் பார்வையிட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்து விட்டு மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை திரும்பினர். இந்த சந்திப்பின்போது, நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரங்களை மத்திய குழுவிடம் முதல்வர் எடுத்துக் கூறுவார். மேலும், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி விரைவில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய குழுவிடம் வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பை முடித்து விட்டு மத்திய குழு, இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,

 சென்னை போரூர்.

Comments