கோவை அருகே பரபரப்பு!! - மாநகராட்சி ஊழியர்களை போல் நடித்து திருட முயற்சி!!

     -MMH

கோவை: விநாயகபுரம் அருகில்  சிவராம் நகர் பகுதியில் புதிய திருட்டு முயற்சி நடந்தது. பங்கூனி தெருவில், ஒரு வீட்டில் இரண்டு உறுப்பினர்கள் குப்பைகளை சேகரிப்பதற்காக கார்ப்பரேஷன் அலுவலக சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி குப்பைப் பையை ஒப்படைக்கிறார்கள்.

இன்று அவர்கள் காலை 11 மணியளவில் அதே வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிப்பதற்காக திரும்பி வந்தனர், பக்கத்து வீட்டு உரிமையாளர் திரு. பார்த்திபன்  சந்தேகம் இருப்பதைக் கண்டு அவர்களிடம் விசாரித்தார். போலிஸை அழைக்க முயற்சித்த போது அவர்கள் டொயோட்டோ குவாலிஸ் வேனில் (TN30 A1679) ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் போலீசார் தங்கள் ரோந்து பணியை முடுக்கிவிட்டு தப்பி சென்ற திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-சுரேந்தர்,கவுண்டம்பாளையம்.

Comments