சின்னமனுர் அருகே விவசாயி வீட்டில் பணம் நகை திருட்டு!!

 

     -MMH

தேனி மாவட்டம், சின்னமனூா்அருகே விவசாயி வீட்டில் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் பணம், நகை திருடப்பட்டுள்ளது.

சீலையம்பட்டி அருகேயுள்ள வேப்பம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சித்திரவேல். இவரது மனைவி ராதிகா. இவா்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி யளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். அப்போது, வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்ததில், பீரோவிலிருந்த ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே, ஓடைப்பட்டிகாவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இது குறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments