சனிப் பெயர்ச்சியின் பலன்கள்..!

-MMH 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது. செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ஈடு, இணையில்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைய சூழலில் தனவரவு என்பது செய்யும் உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளை சார்ந்துள்ளது. அதாவது, கிடைக்கும் வாய்ப்புகளை நல்வழியில் பயன்படுத்தி நம் திறமைகளை வெளிப்படுத்தி அதில் நமக்கான ஆதாயத்தையும் உருவாக்கி பொருளீட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

இன்று நாம் வாழும்போதே எதிர்காலம் பற்றிய சிந்தனைகளையும், எதிர்காலத்திற்கு தேவையான பொருட்சேர்க்கையையும் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இருக்கையில் வருகின்ற சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம் :

உயர் அதிகாரிகளால் லாபகரமான சூழலும், புதிய வாய்ப்புகளின் மூலம் பொருட்சேர்க்கையும் உண்டாகும்.

தனுசு :

மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள்.

மகரம் :

உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய அறிமுகம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் :

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு எண்ணிய செயல்களில் லாபம் அடைவீர்கள்.

-ஸ்டார் வெங்கட்.

Comments