அரையாண்டு தேர்வுகள் தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு..? - பள்ளிக் கல்வித்துறை..!!

-MMH 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பு விடுப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. 

இதனிடையே, மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதேசமயம், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும், இதற்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ள நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.

அதன்படி, நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். அரையாண்டு தேர்வில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது. தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்ற ? அறிவுறுத்தியுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments