சின்னமனுரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலி!!

.           -MMH

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சின்னமனூரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து மதுரையைச் சேர்ந்த கிளீனர் பலியானார்.

சின்னமனூர் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து நெல் அறுவடை இயந்திரங்கள் மதுரை, வேலூர், தஞ்சாவூர் போன்ற  பிற மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் முகாமிட்டுள்ளனர்.

அதன்படி சின்னமனூர் உத்தமபாளையம் இடையே இல்ல வேம்படி களம் அருகே நெல் அறுவடை செய்யும்போது வயலில் குறுக்கே சென்ற உயர் மின்சார வயர் வாகனத்தில் உரசியது. இதில் வாகனத்தில் வேலை செய்து  கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த நாகார்ஜுன்(20) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி சின்னமனூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி. 

Comments