ஓபிஎஸ், மோடி வரிசையில் ஸ்டாலின்... சூப்பர் ஸ்டாருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து!!

     -MMH

     திமுக தலைவர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் அதிகம் கவனம் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். இந்நிலையில் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன.

இன்று அவரது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழத்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,

அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-வது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments