காரைக்குடியில் பாஜகவின் தேர்தல் பிரச்சார துவக்க விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பாண்டியன் திரையரங்கம் எதிரே உள்ள திடலில் பிஜேபியின் தேர்தல் பிரச்சார துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு, நேற்று முன்னோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்ட பாஜகவின் அனைத்து பிரிவுகள் மற்றும் அணிகளுக்கு புதுக்கோட்டை செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் பிரித்தளிக்கப்பட்டது என்று சிவகங்கை மாவட்ட பிஜேபி ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அணித்தலைவர் பொறியாளர் G.ஜெயபால் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்குடி பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
-பாரூக்,சிவகங்கை.
Comments