வாய்க்கால் நீர் வரத்தால் நிரம்பி வழியும் குளம் குட்டைகள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி கிழக்கு வடக்கு கிராம விவசாயிகளுக்கு விவசாய பாசனதிற்காக திருமூர்த்தி அணை நீர் திறந்து விடப்பட்டிருந்தது.
தற்போது ஒரு பகுதியாக அனைத்து கிராமங்களுக்கும் உள்ள குட்டைகள் குளங்கள் நிரம்ப நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆலாம்பாளையம் கொல்லப்பட்டி காளியாபுரம் கரபாடி வெள்ளாளபாளையம் ஆகிய பகுதிகளில் நீர் தற்போது நிரம்பி வருகிறது.
மண்ணிற்கு குளிர்ச்சியும் அப்பகுதி சுற்றுப்புற விவசாய கிணறுகளுக்கு ஊற்று நீர் வருவதற்கு இந்த நீர் தேக்கம் உதவும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments