பொள்ளாச்சி தீ அணைப்பு நிலையம் முன்பு நிரம்பி வழியும் கழிவு நீர் சாக்கடை..!!

 

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிரம்பி வழியும் கழிவுநீர் சாக்கடை நோய் தொற்றை ஏற்படுத்துமா.

பொள்ளாச்சி கோவை சாலை சிங்னல் அருகில் தமிழ்நாடு அரசு தீ அணைப்பு நிலையம் உள்ளது.முகப்பு வாயில் கீழ் பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடை உள்ளது.சாலை விரிவாக்க பணிகளுக்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடர்ந்து அரசு செய்து வருகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டி வரும் பணிகள் நடக்கிறது.இதனால் கழிவு நீர் கால்வாயும் செல்வதால் பணிகள் தொடர முடியா நிலை உள்ளது.கழிவு நீரை தீ அணைப்பு நிலையம் முன்பு அடைந்து வைத்துள்ளனர் சாலை பணியாளர்கள்.

இதனால் கழிவுநீர் தேங்கி வழிந்து சாலையில் சுதந்திரமாக செல்வது போல் அங்கும் இங்கும் ஆறாய் ஓடுகிறது.

சாலையில் செல்வோர் துர்நாற்றம் தாங்க முடியாமல் புலம்பியபடி கடந்து செல்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments