நோய்த் தொற்று அபாயத்தில் மக்கள்! நடவடிக்கை எடுக்குமா தேவகோட்டை நகராட்சி?
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள பழ.அ தெருவில் (24 வது வார்டு) உள்ள கழிவு நீர் கால்வாய்15 வருடத்திற்கும் மேலாக சீரமைக்கப்படாமல், சிதிலமடைந்து இருக்கின்றது. இதனால் சிறு மழைக்குக் கூட வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
எனவே, நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில்,
இது தொடர்பாக தேவகோட்டை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.கண்டு கொள்ளுமா நகராட்சி நிர்வாகம்...???
-சங்கர் தேவகோட்டை.
Comments