பொன்னமராவதி அருகே குழந்தைகளுக்காக திறந்த வெளி விழிப்புணர்வு குழுக் கூட்டம்!!

 

     -MMH

பொன்னமராவதி அருகே வார்பட்டு ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகளால் குழந்தைகளுக்காக திறந்த வெளி விழிப்புணர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகளால் குழந்தைகளுக்காக திறந்தவெளி  விழிப்புணர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வார்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி அழகுமலர் முன்னிலை வகித்தார். இதில் 1098 பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி, இளம் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, குழந்தைகள் தடுப்பு திருமணம், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை  உறுதிப்படுத்துவது பற்றிய நடவடிக்கைகளை விளக்கிக் கூறினார்.

இதில் வார்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, ஊர் முக்கியஸ்தர்கள், ஊராட்சி செயலர், முதியவர்கள், சைல்டு லைன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தைகளின்  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திக்காக,  

- M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments