குப்பைத் தொட்டியின் துர்நாற்றம்!! - வியாபாரிகள் எரிச்சல்!!

     -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் சாலை ஆட்டுத் தொட்டி அருகில் இருக்கக்கூடிய குப்பை கொட்டினால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கடைகளுக்கு துர்நாற்றமும் குப்பைகள் பறந்து வந்து விழும் நிலையும் காணப்படுவது என்று அங்குள்ள வியாபாரிகள்  கூறினர்.

இப்போது எடுத்துள்ள அந்த தொட்டியை மீண்டும் அந்த பகுதியில் வைக்க வேண்டாம் என்று புகார் அளித்து வருகின்றனர். ஆடுதொட்டி பகுதி மிகுந்த நெருக்கடியான பகுதி இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும்இதை கவனத்தில் கொண்டு அங்குள்ள வியாபாரிகள் அந்த குப்பை தொட்டியை அகற்றி தருமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈசா,கோவை.

Comments