கல்லணையில் உபரி நீர் திறப்பு!!

     -MMH

     சோழ மண்டலத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம் கல்லணை ஆகும். இந்த கல்லணை கரிகால சோழன் காலகட்டத்தில் கட்டப்பட்ட அணையாகும். இது  சோழர்களின் நீர் மேலாண்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.  மேலும் இதன் கட்டமைப்பு ஆங்கிலேய பொறியியல் வல்லுனர்களை வியக்க வைத்த ஒரு கட்டமைப்பு ஆகும்.இத்தகைய பெருமை வாய்ந்த  கல்லணையில் இன்று உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  

கல்லணையிலிருந்து கொள்ளிடம் காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் மூலமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் .தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் அதிகமான மழைப்பொழிவு பெற்ற சூழ்நிலையில் கல்லணை நிரம்பி வழிவதால் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் 18 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. 

பொதுவாக உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து திறந்து விடப்படுவது தான் வழக்கம். எவ்வளவு நீர் வந்தாலும் கொள்ளும் இடம் என்பதால் கொள்ளிடம் என்ற காரணப்பெயர் அமைந்தது .அந்தக் கொள்ளிடத்தில் அணைக்கரை என்னும் ஊரில் கீழணை அமையப்பெற்றுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கொள்ளிடம் கடலூரில் கடலில் கலக்கிறது. சோழர்கால பெருமையான கல்லணையை பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாக காண்போம். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments