பொள்ளாச்சி சுற்றுவட்டார தென்னை விவசாயிகள் வேதனை..!!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரதான விவசாயம் ஆன தென்னை விவசாயம்  இதனால் பொள்ளாச்சி என்றாலே இளநீர், தேங்காய், கொப்பரை ஆகியவைகளுக்கு வெளிமார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  கொப்பரை உலர வைக்க 30க்கும் மேற்பட்ட கலன்கள் உள்ளது.         

கடந்த நவம்பர் மாதம் முதல் மழைப்பொழிவு குறைந்ததால் கொப்பரை உலர வைக்கும் பணி சூடுபிடித்தது ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கொப்பரை உணரவைக்கும் பணி மந்தம் அடைந்துள்ளது இதனால் வெளியூர்களுக்கு அனுப்பப்படும் கொப்பரையின் அளவு குறைந்துள்ளது இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments