அ.ம.மு.கவினர் - ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!!

 

-MMH

சிங்கம்புணரியில் ஜெயலலிதா 4 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. அ.ம.மு.கவினர் மலர்தூவி மரியாதை.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு சிங்கம்புணரி அ.ம.மு.கவினர், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். 

இந்த நிகழ்வில் அ.ம.மு.க நகர துணைச்செயலாளர் ஆர்.ஜெயக்குமார், மாநில தலைமைக் கழகச் செயலாளர் உதயகுமார், சிங்கம்புணரி பெரியமந்திரி, நகர விவசாய அணி செயலாளர் கண்ணன், வையாபுரிபட்டி ஊராட்சிச் செயலாளர் எஸ்.ராமசந்திரன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் மகாதேவன், 17வது வார்டு கிளை செயலாளர் ரியாஸ்கான், 18வது வார்டு செயலாளர் சேவுகரெத்தினம், நகர இணைச்செயலாளர் எம்.கார்த்திகேயன், மருதிப்பட்டி கிளை செயலாளர் ஜவகர்லால் மற்றும் அ.ம.மு.க கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments