கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து தங்கச் செயின் பறிப்பு..!

-MMH 

முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு. கோவை. டிசம்பர். 26- கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கணபதி வி.ஜி.ராம் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். தனியார் நிறுவன ஊழியர். 

இவருடைய மனைவி தீபா (வயது 40), இவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு அங்கு உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தீபாவிடம் ஒரு காகிதத்தை கொடுத்து முகவரி கேட்டனர். 

அப்பொழுது அந்த காகிதத்தை தீபா கையில் வாங்கும் பொழுது அவர்கள் பேப்பரை தவற விட்டனர். தீபா அந்த பேப்பரை குனிந்து எடுக்க முயன்றபோது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மறைந்தனர். 

அப்போது கூச்சல் போட்டு அலறினார் அக்கம்பக்கத்தில் இருந்து ஓடிவந்தனர். பொதுமக்கள் விரட்டி பிடிப்பதற்குள் பைக் ஆசாமிகள் மாயமாய் மறைந்தனர். இதுகுறித்து தீபா சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-சீனி போத்தனூர்.

Comments