ஆண்டிபட்டி அருகே நூற்பாலையில் தீ விபத்து..!

-MMH

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் தீவிபத்தால் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து சாம்பலானது.

ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் நிரந்தரப் பணியாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். நூற்பாலையில் காலை 6.30 மணிக்கு ஸ்பின்னிங் பகுதி தரைத்தளத்தில் உள்ள கழிவு பஞ்சுகளில் வெப்பக் காற்று காரணமாக தீ பிடித்துள்ளது.

இதனைக் கண்ட பணியாளா்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் 1 மணிநேரம் போராடி தீயை அைணைத்தனா். இந்த விபத்தினால் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து சாம்பலானதாக நூற்பாலை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments