புத்தாண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது!! போலீசார் எச்சரிக்கை.!!!
புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளார்.
சென்னை கடற்கரையிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்று தகராறில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கோவில்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி என்று போக்குவரத்து உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரும் புத்தாண்டையொட்டி சாலைகளில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்காக உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையிடுகிறார். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி, துணை கமிஷனர்கள் செந்தில்குமார், அசோக் குமார், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சாலைகளில் திடீரென இறங்கி நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
வேகமாகவும், பயங்கரமாகவும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்களை போலீசார் சென்னை முழுவதும் கண்டறிந்து பிடித்தனர். இதில் 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புத்தாண்டு தினம் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிய வருகிறது.
-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.
Comments