கோவையில் முக்கிய சாலைகளில் மாற்றம்..!!

-MMH 

 போக்குவரத்து நெரிசல் காரணமாக, நஞ்சப்பா ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் சாலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு கூறியதாவது:கோவையில் போக்கு வரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளை, ஒரு வழி பாதையாக மாற்றுவது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.  

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சில சாலைகள் ஒரு வழிபாதையாக மாற்றப்படுகின்றன. அவிநாசி சாலை மேம்பாலம் - நஞ்சப்பா ரோடு வழியாக, காந்திபுரத்துக்கு ஒரு வழி பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்படும். காந்திபுரம் டூ அவிநாசி சாலைக்கு வரும் வாகனங்கள், பார்க் கேட் வழியாக இடது புறம் திரும்பி, வ.உ.சி., மைதானம் ரோடு வழியாக, அவிநாசி சாலையை அடைய வேண்டும்.n வட கோவையிலிருந்து வரும் ஆர்.எஸ்.புரம் செல்லும் வாகனங்கள், கவுலிபிரவுன் ரோடு சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும். மேட்டுப்பாளையம் ரோட்டில் வைக்கப்பட்ட தடுப்பு அகற்றப்படும்.

அவிநாசி ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால், தடுப்பு அகற்றப்படும். நவ இந்தியா - ராமகிருஷ்ணா கல்லுாரி சாலையில் வைக்கப்படும். அவிநாசி சாலையில் நடைபாதை உடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்படும்.n உக்கடம் - கரும்புக்கடை சாலையோர ஆக்கிரமிப்புகள், கணபதி டெக்ஸ்டூல் பாலம் - சூர்யா மருத்துவமனை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். 

கணபதி 3ம் நம்பர் பஸ் ஸ்டாண்ட் அகற்றப்பட்டு, பஸ் ஸ்டாப்பாக மட்டும் அனுமதிக்கப்படும்.n இனி ஆம்னி பஸ்கள், லட்சுமி மில் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் ஆகிய இரு இடங்களில் மட்டும், பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.இந்த மாற்றங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும்.இவ்வாறு, துணை கமிஷனர் முத்தரசு கூறினார்!!!

நாளையவரலாறு செய்திக்காக, 

ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments