கும்பகோணம் நகராட்சி மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா கும்பகோணம் நகராட்சியில் கழிவுநீர் சம்பந்தமான வேலைகளை தனியார் துறையிடம் ஒப்படைத்துள்ளனர் இதனால் கும்பகோணம் நகராட்சி தனியார் துறைக்கு மாதம் 15 லட்சம் ரூபாய் வீதம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 45 லட்சம் கொடுக்கின்றனர். இவ்வளவு தொகையை வாங்கும் தனியார்துறை நகராட்சி முழுவதும் சரிவர வேலைகள் செய்வதே கிடையாது.
ஒரு சிறு அடைப்பு ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு 1000 முதல் 5000 வரை வசூல் செய்கின்றனர் கும்பகோணம் நகர் முழுவதும் ஆங்காங்கே கழுவி தொட்டிகள் உடைப்பு ஏற்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது இதனைக் காணும்போது நாம் 1960இல் இருக்கிறோமோ என்பதைப் போன்று தோன்றுகிறது இதனை கண்டுகொள்ளாத கும்பகோணம் நகராட்சி.
கடந்த ஆறு மாத காலமாகவே கும்பகோணம் அனைத்து பகுதிகளிலும் இரண்டு தெருவிற்கு ஒரு கழிவுநீர் தொட்டி வீதம் உடைப்பு ஏற்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது சமீபகாலமாக பெய்த மழையின் காரணமாகவும் மிகவும் அதிகமாக அடைப்புகள் ஏற்பட்டு மிகவும் அதிகமான பகுதிகளில் கழிவு நீர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன எவ்வளவு மனுக்கள் கொடுத்தும் கும்பகோணம் நகராட்சி அலட்சியப்போக்கு இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை,என்று சமூகஆர்வலர்கள்மற்றும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
-வினோத்குமார்,கும்பகோணம்.
Comments