கோவையில் எந்தெந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் வருகிறது!!

-MMH

கோவையில் எந்தெந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் வருகிறது தெரியுமா? முழு பட்டியல்...!!!! - கோவையில் முதற்கட்டமாக 30 இடங்களில் அம்மா மினி கிளினிக் துவங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டு வருகிறது. கோவையை பொறுத்தவரை நேற்று சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.கோவைக்கு 70 அம்மா மினி கிளினிக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 30 கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன. இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 கிளினிக்குகளும், புறநகர் பகுதிகளில் 23 கிளினிக்குகளும் துவங்கப்படுகின்றனர். பகுதி வாரியான விவரங்கள்:

மாநகராட்சி பகுதிகள்.

1) சிங்காநல்லூர் (நெசவாளர் காலனி)

2) வடவள்ளி

3) காந்திபுரம்

4) சிவானந்தா காலனி

5) செல்வபுரம்

6) மசக்காளிபாளையம்

7) ரத்தினபுரி (முத்துக்குமரன் நகர்)

தொண்டாமுத்தூர் வட்டாரம்...

1) வேடபட்டி

2) பேரூர் செட்டிப்பாளையம்

3) ஆலாந்துறை

4) போளூவாம்பாட்டி

மதுக்கரை வட்டாரம்.

1) வெள்ளலூர் (குடிசைமாற்று வாரிய குடியிருப்பு)

2) மலுமிச்சம்பட்டி

எஸ்.எஸ்.குளம் வட்டாரம்

காரமடை வட்டாரம்.

1) ரங்கம்பாளையம்

2) ராமபாளையம்

பெ.நா.பாளையம் வட்டாரம்.

1) நரசிம்மநாயக்கன்பாளையம்

சூலூர் வட்டாரம்

1) பீடம்பள்ளி

2) குரும்பபாளையம்

சுல்தான்பேட்டை வட்டாரம்.

1) எஸ்.அய்யம்பாளையம்

ஆனைமலை வட்டாரம்.

1) அட்டகட்டி

2) தேவிபட்டிணம்

வால்பாறை வட்டாரம்

பெரியகல்லார்

பொள்ளாச்சி வடக்கு வட்டாரம்.

1) திப்பம்பட்டி

2) ராசக்காபாளையம்

3) நல்லி கவுண்டன்புதூர்

பொள்ளாச்சி தெற்கு வட்டாரம்.

1) தொண்டாமுத்தூர்

2) ஜமீன் கோட்டாம்பட்டி

3) சூலேஸ்வரன்பட்டி

-தலைமை நிருபர் கிரி.

Comments