கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!!

 

-MMH

கோவை நேரு நகர், புஷ்பம் கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த வைரநெக்லஸ் மற்றும் செயின்,மோதிரம், வளையல்கள் உட்பட, 50 சவரன் தங்க நகைகள், இரண்டரை லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments