விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சி..!

 

-MMH

பொன்னமராவதி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் 100 விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கி தேனீ வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் 100 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தேனீ பெட்டிகள் வழங்கி தேனீ வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இயற்கை தேனீ வளர்ப்பு பயிற்றுநர் நாகராஜன் பயிற்சி வழங்கினார்.

பயிற்சியின் போது அவர், 'தேனீ ஒரு சமுதாயதேவதை. பூமியை பசுமை மயமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. தேனீ வளர்ப்பு மிகுந்த லாபகரமான தொழிலாகும். நமது நாட்டில் நான்கு வகைத் தேனீக்கள் உள்ளன கொம்புத்தேன், மலைத்தேன்,கொசுத்தேன், பொந்துத்தேன் உள்ளன.  இதில் பொந்து தேன் வகை பெட்டிகளில் வைத்து வளர்ப்பதற்கு மிக ஏற்றதாகும். 

தேனி வளர்ப்பால் ஒரு பெட்டிக்கு வருடத்திற்கு ரூபாய் 4000 முதல் 8000 வரை லாபம் கிடைக்கும். தேன் மகரந்தங்களை சேகரித்து விற்பதன் மூலமும் லாபம் ஈட்டலாம். தேனீயின் விஷம் புற்றுநோய்களுக்கு மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேனீயின் விஷத்தை சேகரிக்க கற்றுக்கொண்டால் அதன் மூலம் மிகுந்த வருமானம் கிடைக்கும். தேனி வளர்ப்பு விவசாயிகளுக்கு வருடம் தோறும் லாபம் தரும் நல்ல தொழில் ஆகும். இதனை பயன்படுத்தி விவசாயிகள் தனது வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்' என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்.

Comments