இறப்பு என்னைத் தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்! - தமிழருவி மணியன்!!

-MMH

ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் அரசியலில் குதிக்கப் போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி நேற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியலை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் ஒருவர் தமிழருவி மணியன். தமிழகத்தில் ஒரு புதிய மாற்றம் ரஜினியின் மூலம் ஏற்படலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு தற்போது பெரும் ஏமாற்றமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவை அடுத்து அவர் இனி சாகும் வரை அரசியல் இல்லை என்று தெரிவித்துள்ளார். இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் அரசியலில் இருந்து விடை பெறுகிறேன் என்றும் தமிழர் மணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியின் அரசியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனா மூர்த்தி என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments