பொங்கலுக்குள் சென்னை மாநகராட்சியின் 'ஸ்மாா்ட் அட்டை'!!

     -MMH

    பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கும் சேவைக்கு கட்டணம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் அட்டையை, வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: "கடந்த 2018-ஆம் ஆண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து, குடிநீா், மின்சாரம் உள்ளிட்டவற்றுக்குக் கட்டணம் செலுத்தும் வகையிலான ஸ்மாா்ட் அட்டையை வடிவமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

தற்போது இந்த அட்டையை ஒரு ப்ரீபெய்டு டெபிட் காா்டாக (பற்று அட்டை) பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னைவாசிகள், உணவகம், வணிக வளாகம் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்த பயன்படுத்தலாம்.

இதே போல் ஏற்கெனவே ஆமதாபாத் மாநகராட்சியிலும் 'ஜன்மித்ரா' என்னும் அட்டை செயல்பாட்டில் உள்ளது. இதுவும் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இதைப் பயன்படுத்துவோருக்கு, அங்குள்ள ஒரு சில உணவகங்கள் சலுகையும் அளிக்கின்றன. தற்போது இதேபோன்ற ஓா் அட்டையை சென்னையிலும் செயல்பாட்டுக் கொண்டு வருவதன் மூலம், சென்னை மற்றும் அதன் மாநகராட்சிக்கு தனித்துவமான அடையாளம் கிடைக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

-பாலாஜி தங்க மாரியப்பன், சென்னை போரூர்.

Comments