பிரபல சின்னத்திரை நட்சத்திரம் பாண்டியன் ஸ்டோர் சித்ரா தற்கொலை!!

     -MMH

    பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சித்ரா. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இன்று காலை 2.30 மணிக்கு சித்ரா திடீரென்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பூந்தமல்லியில் உள்ள ஹோட்டலில் தற்கொலை செய்துள்ளார் .

போலீசார் இதற்கான வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலைக்கு மன அழுத்தமா அல்லது குடும்பப் பிரச்சனை ஒரு காரணமா.? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

-சுரேந்தர்.

Comments