கோவை மக்களை மிரட்டும் கந்துவட்டி கண்டு கொள்ளுமா காவல்துறை...!!

    -MMH

கோவை மாவட்டம்: வறுமை காரணத்தால் பணத்தை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காத நிலையில் பணம் கொடுத்த முதலாளியிடம் சிக்கி தவிக்கும் கடனாளிகள்.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக வாங்கக்கூடிய பணத்திற்கு அதிக வட்டி போடுவதாகவும் தொழில் செய்வதற்காகவும் வாங்கப்படும் பணத்திற்கு இரட்டிப்பு வட்டி போடுவதாகவும்  தினந்தோறும் காவல் நிலையத்தில்  புகார்கள் வருவதாகவும் தெரிகின்றது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரச்சினைகளை முடித்து வைத்தாலும் மீண்டும் தலைதூக்க படுகிறது என்றுதான் கூறுகின்றனர்.

கோவை நகரில் அதிக அளவில் இதுபோன்ற கந்துவட்டி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments